பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் வாழ்க்கைத் துணைநலம் வாழ்க்கைத்துணை யார்? குடும்பப் பண்பினள்: கணவன் வருவாய்க்கேற்ப வாழ்பவள். 5 1 வீட்டுப்பண்பு மனைவியிடத்து இல்லையானால் வாழ்வில் பிறநலம் இருந்தும் பயனில்லை. 52 மனைவிக்குப் பண்பிருப்பின் எது இல்லை? மனைவிக்குப் பண்பில்லை எனின் எது உண்டு 53 கற்புத்திண்மை செறிவாக இருப்பின் ஆணுக்கு மனைவியினும் நற்பேறு உண்டா? 54 தெய்வத்தை வணங்காது கணவனை வணங்குபவள் பெய்யென்றால் மழையும் பெய்யுமே. 55 தன்னையும் கணவனையும் புகழையும் போற்றிச் சுறுசுறுப்பாக இருப்பவளே மனைவி. 56 மனைவியர்க்குக் கற்புக் காவலே காவல்; வீட்டுச் சிறை என்ன பயன் செய்யும்? 57 கணவனது அன்பைப் பெறும் மனைவியர் மேலுலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர். 58 மனைவி புகழ் காவாவிடின் பகைவர் முன் காளைபோன்ற நடை கணவனுக்கு இராது. 59 மனைவியின் பண்பே குடும்பத்துக்கு மங்கலம், குழந்தைப் பேறே குடும்பத்தின் நல்லணி. 60 12 இல்லறவியல் அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51 மனைமாட்சி இல்லாள்கண்_இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். 52 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை 53 பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின். 54 தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. 55 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56 சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. 57 பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. 58 புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை 59 மங்கலம் என்ப மனைமாட்சி மற்று.அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. 13