பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவரை அறம் - மக்கட்பேறு அறிவுடைய குழந்தைச் செல்வத்தைத் தவிரப் பிறசெல்வங்களை யாம் மதிப்பதில்லை. 61 பழியில்லாப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால் பெற்றோரை எப்பிறவியும் தீயவை நெருங்கா. §2. தம் நல்வினையால் குழந்தைகள் பிறத்தலின் குழந்தைகளே பெற்றோரின் பொருளாவார். to 3 அமிழ்தினும் மிக இனிக்குமே தம் குழந்தைகள் இளங்கையால் கிண்டிய உணவு. & 4 குழந்தை மேனிபடுவது உடலுக்கு இன்பம், மழலைச் சொல் கேட்பது காதுக்கு இன்பம். 65 தம் குழந்தைகளின் மழலைச்சொல் கேளாதவரே குழலிசை யாழிசை இனியது என்பர். 6 6 அவையில் முந்தியிருக்கும்படி அறிவளிப்பதே தந்தை மகனுக்குச் செய்யும் கடமை. 67 தம் குழந்தைகளைப் பேரறிவுடையவர் ஆக்குவது பெற்றோர்க்கும் எல்லோர்க்கும் இனியது. 68 தன்மகன் வீரன் என்று புகழக்கேட்ட தாய் பெற்றகாலத்திலும் பெருமகிழ்ச்சி அடைவாள். 69 எத்தவஞ் செய்து பெற்றான் இவன்தந்தை என்று பலர் சொல்லும்படி நடப்பதே மகன் கடமை, 70 14 இல்லறவியல் அதிகாரம் 7 மக்கட்பேறு பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்க்ட்பேறு அல்ல பிற. r 61 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழியிறங்காப் பண்புடை மக்கட் பெறின். தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். 63 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். 64 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று.அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். 66 தந்தை ழகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல். தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 6 மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 8 ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். 69 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல். 70 15