பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அன்புடைமை அன்புக்கும் அடைப்பு உண்டோ? அன்புடையவர் கண்ணிரே உள்ளத்தைக் காட்டிவிடும். அன்பிலார் எல்லாம் தமக்கே கொள்வார்; அன்பினர் உடம்பையும் பிறர்க்கு வழங்குவர். உயிர் உடம்பினைப் பெற்ற தொடர்பு இருவர் அன்புத்தொடர்பால் வந்தது என்பர். அன்பு பழகும் விருப்பத்தைத் தரும்: அவ்விருப்பம் புதிய நட்புச் சிறப்பைத் தரும். உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு அன்போடு வாழ்ந்ததால் வந்தது என்பர். அறத்திற்கு மட்டும் அன்பு துணையில்லை; வீரத்திற்கும் அதுவே துணை. எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்தும்; அன்பில்லா உயிரை அறம் வருத்தும். நெஞ்சத்தில் அன்பின்றி வாழ முடியுமா? பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்க்குமா? அன்பாம் உறுப்பு அகத்தில் இல்லையெனின் புறத்து உறுப்பெல்லாம் இருந்தும் என்ன? உயிருடைய உடம்பாவது அன்புடைய வாழ்வு: அன்பிலார் உடம்புகள் எலும்புத் தோல்கள். 1 5 அறம் 71 72 73 74 76 77 78 80 இல்லறவியல் அதிகாரம் 8 அன்புடைமை அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும். 71 அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. 73 அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. 74 ஆன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றிார் எய்துஞ் சிற்ப்பு 7 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் 5 மறத்திற்கும் அஃதே துணை. 76 என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். 77 அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. 78 புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79 அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. 80 17