பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை விருந்தோம்பல் குடும்பமாக இருந்து Cறந்து வாழ்வதெல்லாம் விருந்துபேணி உதவி செய்தற்கே. வந்தவிருந்து வெளிப்புறம் இருக்க, தனக்குச் சாவாமருந்து கிடைப்பினும் உண்ணல் ஆகாது. நாளும் வருகின்ற விருந்தைப் போற்றுக; வாழ்வு துன்பப்பட்டு அழியாது. முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில் அகம் மலர்ந்து திருமகள் தங்கிவிடுவாள். விருந்து செய்தபின் மிச்சத்தை உண்பவனது நிலத்துக்கு விதைகூட இடவேண்டுமா? வந்தாரைப் போற்றி வருவாரை ஏற்பவன் தேவர்க்கு நல்விருந்து ஆவான். விருந்தின்பயன் இதுவென்று அளக்க முடியாது; விருந்தினர் பெருமையே விருந்தின் பெருமை. விருந்து ஏன்னும் வேள்வியில் ஈடுபடாதவர் காத்த பொருளையும் இழந்து பின் வருந்துவர். செல்வத்தில் வறுமை விருந்திடா மடமையாம்: இக்குணம் முழுதும் அறிவிலியிடமே இருக்கும். அனிச்சப்பூ மோந்தால் வாடும்; விருந்தோ முகமாறிப் பார்த்தாலே வாடிப் போம். 18 அறம் 81 82 83 84 85 86 87 88 89 9 () இல்லறவியல் அதிகாரம் 9 விருந்தோம்பல் இருந்தோம்பி இல்வாழ்வ_தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. 81 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா - மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. 82 வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. 83 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல், 8 ஆ இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். 85 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. 86 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். 87 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். 88. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை மடவார்கண் உண்டு. 89 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. 19