பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இனியவை கூறல் அன்பும் தூய்மையும் அறமும் உடைய உண்மையாளர் சொல்லே இன்சொல்லாம். முகமலர்ந்து என்றும் இன்சொற் கூறின் அகமலர்ந்து கொடுப்பதினும் சிறந்தது. முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளத்தோடு சொல்லுக; அதுவே அறம். யார்க்கும் இன்பச் சொல்லைச் சொல்லுக; துன்பந்தரும் வறுமை வாராது. பணிவும் இன்சொல்லுமே உயிரணிகள்: பிறவெல்லாம் உடலணிகள். நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறின் தீமை தேயும்: அறம் வளரும். பிறர்க்கு நற்பயன் தரும் உயர் பண்புச்சொல் தனக்கும் நயமும் நலமும் தரும். சிறுதன்மை இல்லாத இன்சொல் எப்பிறப்பிலும் இன்பம் தரும். இன்சொல் தனக்கு நலந்தருவதைக் கண்டவன் ஏன் பிறரிடம் கடுஞ்சொற் கூறுகிறான்? இன்சொல் இருக்கவும் கடுஞ்சொல் கூறாதே; கனியை விடுத்துக் காயைக் கவரலாமா? 20 அறம் 9 1 92 9 3 94 95 9 Ꮾ 97 9 8 99 1 () () இல்லறவியல் அதிகாரம் 10 இனியவை கூறல் இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91 அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல னாகப் பெறின். 92 கத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் ಫ್ಲಿ லினதே அறம். 93 ன்புறுஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் ಫ್ಲಿ: இன்சொ லவர்க்கு. 94 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. 95 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். 96 நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று - பண்பின் தலைப்பிரியாச் சொல். 97 சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும். 98 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. 99 இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. 100 21