பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை செய்ந்நன்றி அறிதல் கேளாமலே முன்வந்து செய்த உதவிக்கு உலகமும் வானமும் கொடுத்தாலும் ஈடாகா. நற்சமயத்துச் செய்த உதவி சிறிதாயினும் உலகத்தைவிட மிகச் சிறந்தது. பயன் கருதாது செய்த உதவியின் நன்மை எண்ணிப் பார்ப்பின், கடலினும் பெரியது. சிறிதளவு நன்மை செய்தாலும் பயனறிந்தோர் பெரிய நன்மையாகக் கருதுவர். உதவி உதவிய பொருளைப் பொறுத்ததன்று: உதவி பெற்றவரின் பண்பினைப் பொறுத்தது. தூயவர் நட்பை மறவாதே துன்பத்தில் துணைசெய்தார் நட்பைத் துறவாதே. துன்பக் கண்ணிரைத் துடைத்தவர் நட்பினை எடுக்கின்ற பிறப்பெல்லாம் எண்ணுவர். உதவியை மறப்பது என்றும் நல்லதில்லை; உதவாமையை உடனே மறப்பது நல்லது. ஒருநன்மை செய்தவர் பெருந்தீமை செய்தாலும் எந்த நலத்தை அழித்தாலும் பிழைக்கலாம்: நன்றி கெட்டால் பிழைப்பில்லை. 22 அறம் } 0 l. 1 0? 1 03 1 (j6 107 1 (38 1 09 1 1 0 இல்லறவியல் செய்ந்நன்றி அறிதல் செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் அதிகாரம் 11 வானகமும் ஆற்ற லரிது. 101 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. 102 பயன்தூக்கார் செய்த உதவி நயன்துக்கின் நன்மை கடலிற் பெரிது. 103 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். 104 உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106 எழுழை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு - 107 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. 108 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109 ஏந்நன்றி தொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்றி மகற்கு. 110 23