பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் பயனில சொல்லாமை கேட்டார் வெறுக்க வீணாகப் பேசுபவனை எல்லாரும் இகழ்வர். - I 91. பலர்முன் வீண்பேச்சுப் பேசுவது நண்பர்க்கு வேண்டாதன செய்தலினும் தீது. 192. பயனில்லாதவற்றை விரித்து உரைத்தால் விளங்காதவன் என்று பேராகும். 1 93 பயனில்லாத சிறுசொல்லைப் பலர்முன் கூறுவது அறிவும் இல்லை; நன்மையும் இல்லை. 194 பண்புடையவர்கள் பயனில சொன்னால் தரமும் சிறப்பும் போய் விடும். 195 பயனில சொல்வானைப் புகழ்கின்றவனை மனிதன் என்னாதே; மனிதப்பதர் என்று சொல். 196 சான்றோர் முறையல சொல்லினும் சொல்லலாம்; பயனற்றவை சொல்லல் ஆகாது. 1 97 அரிய பயனை அடைய முயலும் அறிஞர் பெரியப்யன் இல்லாதவற்றைச் சொல்லாம். 1 98 மயக்கம் இல்லாத நல்லறிஞர் மறந்தும் பொருளற்ற சொற்களைச் சொல்லார், 19 9 பயனுள்ள நல்ல சொற்களையே சொல்லுக: பயனில்லா விண் சொற்களைச் சொல்லாதே. 2 () () 40 இல்லறவியல் அதிகாரம் 20 பயனில சொல்லாமை பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 19t பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலின் தீது, 192 நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. 193 நயன்சார நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. 194 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். 195 பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். 196 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. 197 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். 198 பெருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாறு காட்சி யவர். 199 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். 200 41