பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் தீவினையச்சம் கொடியவர் தீவினைகளை அஞ்சாது செய்வர்: நல்லவர் செய்ய அஞ்சுவர். 20, 1 யார்க்கும் கொடுமைகள் கொடுமை தரும்; தீயைக்காட்டிலும் அவற்றை நெருங்காதே. 202 கொடுமைகளைப் பகைவர்க்கும் செய்யாது ஒழிக. அதுவே அறிவிற் சிறந்த அறிவாகும். 203 மறந்தும் பிறனுக்குக் கேடு எண்ணாதே. எண்ணின், அறம் உன்னை வாழவிடுமா? 2.04 இல்லை என்பதற்காகத் தீமைகள் செய்யாதே; செய்யின் திரும்பவும் பெரிய ஏழையாவாய். 205 துன்பங்கள் தன்னைத் தொடவிரும்பாதவன் பிறர்க்குத் தீமைகள் செய்யாது இருப்பானாக. 206 எனைப் பெரிய பகையிலிருந்தும் தப்பிக்கலாம்; கொடுமைப் பகையோ விடாது கொல்லும், 207 கொடுமை செய்தார் கெடுவது உறுதி: நிழல் ஒருவன் அடியைவிட்டு நீங்குமா? 208 தான்வாழ ஆசை இருக்குமானால் சிறிதும் தீவினைப் பக்கம் செல்லாதே. 209 நெறிவிலகிக் கொடுமை இழையாதவன் என்றும் கேடில்லாதவன் எனத் தெளிக. 21 O 42 இல்லறவியல் அதிகாரம் 21 தீவினையச்சம் தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு. 201 தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். 202 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவர்க்கும் செய்யா விடல். 203 மறந்தும் பிறன்கேடு சூழற்த சூழின் அற்ஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. 204 இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. 205 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். 206 எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வியாது பின்சென்று அடும். 2O7 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வியாது அடிஉறைந் தற்று. 208 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்ற்ைக தீவினைப் பால். 209 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

செய்யான் எனின். 210

43