பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள சதளவுரை அறம் அருளுடைமை அருளே செல்வத்துள் சிறந்த செல்வம்: பொருளோ கயவரிடத்தும் உண்டு. 241 நல்லவழியை ஆராய்ந்து அருள் செய்க எவ்வகையால் பார்த்தாலும் அருளே துணை. 242 அறியாமையும் துன்பமும் உடைய உலகத்தை அருள்நெஞ்சம் கொண்டவர் அடைய யாட்டார். 2,43 எல்லா உயிர்களையும் பேணும் அருளாளனுக்குத் தன்னுயிர் பற்றிய கவலை வினை இல்லை. 244 அருளாளர்க்குத் துன்பம் என்பது இல்லை; காற்றுடன் வளமுடைய இல்வுலகமே சான்று. 245 அருள் இல்லாமல் கொடுமைகள் செய்பவர் பொருளிழந்து வாழ்வும் வழுவினார் ஆவர். 246 பொருளில்லார்க்கு இவ்வுலக வாழ்வு இல்லை: அருளில்லார்க்கு அவ்வுலக வாழ்வு இல்லை. 24? பொருளில்லார் ஒருநாள் செல்வத்தால் செழிப்பர்; அருளில்லார் தொலைந்தவரே. திரும்ப மீளார். 248 அருளிலான் அறஞ்செய்தான் என்பது பேதை இறைவனைக் கண்டான் என்பது போலாம். 249 உன்னினும் எளியவனை நீ வருத்தும்போது உன்னினும் வலியவன்முன் உன்னை நினை. 250 § {} துறவறவியல் அதிகாரம் 25 அருளுடைமை அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. 24? நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான் தேரினும் அஃதே துணை. 242 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். 243 மன்னுயிர் ஒம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. 244 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. 245 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்ல்வை செய்தொழுகு வார். 246 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247 பொருளற்றார் பூப்பர் ుక్త அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. 248 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். 249 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. 250 51