பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் தவம் தவத்தின் வடிவு தன்துன்பத்தைப் பொறுத்தல், எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாமை. 26 I தவக்கோலமும் தவமுடையவர்க்கே சிறப்பு: அதனைத் தவமிலாதார் கொள்வது பழிப்பு. 262 இல்லறத்தார் ஏன் தவஞ்செய்ய மறந்தனர்? துறவிக்கு உதவ வேண்டும் என்பதற்காகவா? 2.53 பகைவரை அழிக்கலாம், நண்பரை ஆக்கலாம்; இந்த ஆற்றல் நினைப்பின் தவத்தால் வரும். 264 வேண்டுவன வேண்டியபடி பெறலாம்; ஆதலின் உரிய தவத்தை உடனே முயலுக. 265 தவஞ்செய்பவரே தங்காரியம் செய்பவர்; பிறர் ஆசையால் வீண்காரியம் செய்பவர். 266 காய்ச்சக் காய்ச்சப் பொன் ஒளிமிகும்; துறவிக்குத் துன்பம் தாக்கத் தாக்க மெய்யறிவு மிகும். 267 தன்னுயிர் தன்முனைப்பு இல்லாதவனை உலகத்து உயிரெல்லாம் வணங்கும். 268 தவத்தின் ஆற்றல் கைகூடியவர்கட்கு யமனைத் தாண்டுதலும் இயலும். 269 உலகில் வறியவர் பலர். ஏன்? முயலாதார் பலர்: முயல்வார் சிலர். 270 葛忒 துறவறவியல் அதிகாரம் 27 தவம் உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. 261 தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது. 262 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் - 263 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். 264 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். 265 தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆன்சயுட் பட்டு. 266 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாம் தொழும். 268 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. 269 இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா த்வர். 270 55