பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திருக்குறள் தெளிவுரை வாய்மை வாய்மை என்று போற்றப்படும் பண்பு எது? சிறிதும் தீமை இல்லாத சொற்களைக் கூறுவது. பொய்யினால் பிறர்க்குத் துயநன்மை வரின் அப்பொய்யையும் மெய்யாகக் கொள்ளலாம். உன்நெஞ்சறியப் பொய் கூறாதே கூறின் உன் நெஞ்சம் உன்னைச் சுடாதா? மனமறியப் பொய் சொல்லாதவன் உலகத்தார் மனத்தில் எல்லாம் இருப்பான். தவமும் தானமும் செய்வதினும் மேலானது உள்ளத்தோடு உண்மை சொல்வது. பொய்சொல்லாமை பெரும் புகழாம்: பொய் சொல்லத் தெரியாமை பேரறமாம். உண்மையை உண்மையாகவே கடைப்பிடித்தால் பிறஅறங்கள் செய்யவும் வேண்டுமோ? புறத்தூய்மை நீரால் உண்டாகும்; மனத்துய்மை பொய் சொல்லாமையால் விளங்கும். எல்லா ஒளியும் ஒளியல்ல; சான்றோர்க்கு உண்மை ஒளியே ஒளி. யாம் உண்மையாகக் கண்ட உண்மைகளுள் வாய்மையினும் நல்லறம் வேறில்லை. § {} அறம் 2.91 292 29.3 29.4 2.95 3 () () துறவறவியல் அதிகாரம் 30 வாய்மை வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். 291 பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். 293 உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். 294 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. 29 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை 5 எல்லா அறமும் தரும். 296 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. 297 புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். 298 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. 299 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. 300 61