பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் கள்ளாமை வசைவேண்டாம் என்பவன் மிகச் சிறிதும் - கள்ளமின்றித் தன் நெஞ்சைக் காக்க. 281 பிறன் பொருளை மனத்தால் நினைப்பதும் தீது: ஆதலின் திருடிப் பறிக்க எண்ணாதே. 282 களவினால் வந்த செல்வம் மிகவும் பெருகுவது போலத் தோன்றிக் கெடும். 283 களவிலே மிகுந்த ஆசை இருப்பது கடைசியில் நீங்காத துன்பம் தரும். 2.84 பிறர் ஏமாந்த நிலையைப் பார்த்திருப்பவனிடம் அருளும் அன்பும் இரா. 285 களவிலே மிக்க சுவை கண்டவர்கள் அளவிலே நின்று வாழ்க்கை நடத்தார். 286 நெறிபட வாழும் உறுதியுடையவர் இடத்துத் திருடும் பெரும்பேதைமை இராது. 287 நெறியாளர் நெஞ்சு அறத்துக்கு இருப்பிடம்: திருடர்கள் நெஞ்சு மறைவுக்கு இருப்பிடம், 288 களவுதவிர வேறொன்றும் அறியாதவர்கள் தீமைகள் செய்து விரைவில் அழிவர். 289 திருடுபவருக்கு விரைவில் உயிர் போகும்; திருடாதவர்க்கு வானுலகமும் போகாது. 290 - 58 துறவறவியல் அதிகாரம் 29 கள்ளாமை எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். 282 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலிக் கெடும். 283 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். 284 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். 286 களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல், 287 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. 288 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். 289 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. 290 59