பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்னா செய்யாமை சிறப்புச் செல்வம் கிடைப்பினும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையே தூயவர் கொள்கை. கருவம் கொண்டு துன்புறுத்தினும் திரும்பத் துன்பம் செய்யாமையே துயவர் நோக்கம். வலிய வந்து பகைத்தவர்க்குங்கூடத் துன்பம் செய்யின் துயரம் நீங்காது. கொடுமை செய்தாரைத் தண்டிப்பது எப்படி? அவர் வெட்கப்படும்படி நன்மை செய்வது. பிறர் துன்பத்தைத் தன்துன்பம் போலக் கருதாத இடத்து அறிவினால் என்ன பயன்? தனக்குக் கொடியது எனப் பட்டதைத் தான் பிறர்க்குச் செய்ய விரும்பலாமா? எவ்வகையாலும் என்றும் எவர்க்கும் மணமறியக் கொடுமை செய்யாதே. தன்னுயிர்க்குப் பிடிக்காது என்ற தீமையைப் பிறவுயிர்க்கு ஏன் செய்கின்றான்? காலையில் பிறர்க்குக் கொடுமை செய்யின் மாலையில் உனக்குக் கொடுமை தானேவரும். கேடுகள் கேடுசெய்தார்க்கே வந்துசேரும்; துன்பம் வேண்டாதார் துன்பம் செய்யார். 64 அறம் 31 I 3 12 3 i 3 3 i 4 3 # 6 31 7 3 i & 3 # 9 32 () துறவறவியல் அதிகாரம் 32 இன்னா செய்யாமை சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 311 தறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். 31 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். 313 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். 344 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை 315 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். 316 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. 317 தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். 318 பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். 319 நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். 320 65