பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அறம் கொல்லாமை எவ்வுயிரையும் கொல்லாமையே அறமாம்: கொல்லுதல் எல்லாத் தீமையும் தரும். 321 ஆசிரியர்கள் கூறிய அறத்துள் மேலானது பகுத்துண்டு பல்லுயிரையும் காப்பதுவே. 322 நிகரற்ற அறம் கொல்லாமை; அதற்குத் துணையாகும் வாய்மையும் நல்ல அறம். 323 நன்னெறி என்பது யாது ஒருயிரும் கொலைப் படாதபடி எண்ணும் நெறி. 324 பிறந்த உயிரைக் கொல்ல அஞ்சுபவனே பிறவிக்கு அஞ்சும் துறவியினும் மேலானவன். 325 கொல்லா அறத்தைக் கொண்டவன் ஆயுளை உயிருண்ணும் யமன் நெருங்க மாட்டான். 326 இன்னொருவன் உன்னுயிரை எடுக்கும் போதும் அவனது இன்னுயிரை எடுக்காதே. 32.7 வீரர்க்குப் போரில் படை விளைவு சிறந்தது: தனிக்கொலை விளைவு இழிந்தது. 328 எல்லா இழிவுகளையும் ஆராய்ந்த பெரியவர் கொலைஞனை மிக இழிந்தவனாகக் கருதுவர். 329 நோயுடலும் தீயவாழ்வும் உடையார் யார்? ஒருயிரை உடம்பிலிருந்து பிரித்தவர். 330 66 துறவறவியல் அதிகாரம் 33 கொல்லாமை அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். 521 பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று.அதன் பின்சாரப் பொய்யாமை நன்று. 323 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. 324 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. 325 கொல்லாமை மேற்கொண் பொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. 327 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை 328 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. - 329 உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330 台7