பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை அவாவறுத்தல் ஆசைதான் எவ்வுயிர்க்கும் என்றும் நெடும் பிறவி தரும் வித்து என்பர். ஒன்று விரும்பின் பிறவாமையை விரும்புக: விரும்பாமையை விரும்பின் அது கைகூடும். ஆசையின்மையே சிறந்த செல்வம்: அதுபோன்ற செல்வம் எங்கும் இல்லை. மனத்துய்மை என்பது ஆசையின்மையே: அத்தன்மை வாய்மையினால் வரும். ஆசைவிட்டவரே பற்று விட்டவர் ஆவார்; மற்றவர்கள் முடிவாகப் பற்று விட்டதில்லை. ஆசை யாரையும் ஏய்த்து விடும் ஆதலின் அதற்கு அஞ்சி நடப்பதே அறம். ஆசையை முழுதும் அறுத்து விட்டால் நல்வினை நாம் விரும்பியபடி வரும். ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லை; அது உடையார்க்குத் துன்பம் வளரும். ஆசையாகிய பெருந்துன்பம் அகன்று விட்டால் இன்பம் வந்துகொண்டே இருக்கும். என்றும் நிரம்பாத ஆசையை நீக்கிவிடின் நீங்காத இன்பம் உடனே கிடைக்கும். 74 அறம் 3.6 L 352 3.63 364, 365 366 367 3.68 3 & 9 370 துறவறவியல் அதிகாரம் 37 அவா அறுத்தல் - அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவ்ாஅப் பிறப்பினும் வித்து. - 361 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். 362 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல், 363 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். 364 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். 2. அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை 365 வஞ்சிப்ப தோரும் அவா. - 366 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். 8 -- . -6 ٹی அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம்அஃ துண்டேல் தவாஅது மேன்மேல் வரும். - 368 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். 369 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே. பேரா இயற்கை தரும். S70 75