பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் அறிவுடைமை . அறிவு குற்றம் தடுக்கும் படை பகைவரும் ஊக்கம் அழிக்க முடியாத அரண். 421 சென்ற மனத்தைச் சென்றபடி விடாது தீது நீக்கி வழிப்படுத்துவதே அறிவு. 422 எச்செய்தியை யார் யாரிடம் கேட்டாலும் அதன் உண்மையைக் காண்பதே அறிவு. 423 அருமையை எளிமையாக நீ சொல்லுக; பிறர்கூறும் நுண்மையை விளங்கிக் கொள்ளுக. 424 உலகத்தைத் தழுவிப் போவது சாதுரியம்; மகிழ்தலும் வருந்தலும் இல்லாதது அறிவு. 4.25 எங்ங்னம் போகின்றது உலகம் அங்ங்னம் ஒட்டி வாழ்வதே அறிவுடைமை. 426 மேல்வருவதை அறிபவர் அறிவுடையவர்: அத்திறமை இல்லாதவர் அறிவில்லாதவர். 427 அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைத்தன்மை: அதற்கு அஞ்சுதல் அறிவுத்தன்மை. 42.8 வருமுன்னர்க் காக்க வல்ல அறிஞர்க்கு அதிர்ச்சி தரும் துன்பம் வராது. 孪29 அறிவுடையவர் அறிவால் எல்லாம் உடையர்: 430 அறிவிலார் என்ன இருந்தும் இலர். 恕8 அரசியல் அதிகாரம் 43 அறிவுடைமை அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் - உள்ளழிக்க லாகா அரண். 421 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. 423 எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. 424 உலகம் தழிஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. 425 எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு. A426 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா த்வர். 427 அஞ்சுவ தஞ்சாமை_பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். : 428 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். 429 அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். - 430 7 89