பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் கண்ணோட்டம் (இரக்கம்) இரக்கம் என்னும் அழகிய பெரும்பண்பு இருத்தலால் இவ்வுலகம் இருக்கின்றது. - 571 உலகியல் என்பது இரக்கப்பண்பில் உள்ளது: இரக்கமில்லார் இருப்பது பூமிக்குப் பாரம். 572 பாட்டுக்குப் பொருந்தாத இசையாற் பயனென்? இரக்கம் காட்டாத கண்ணால் என்ன பயன்? 573 வேண்டும் அளவு இரக்கம் ஓடாத கண் முகத்தில் இருப்பதுபோல் காட்டுவது எதற்கு? 574 கண்ணிற்கு நகையாவது இரக்க உணர்வே: இரக்கமிலாக் கண்னைப் புண்ணென்று கொள்க், 575 கண்ணோ டிருந்தும் இரக்கம் இல்லாதவர் . மண்னோ டிருந்தும் வளராத மரம் போல்வர். 576 இரக்கம் இல்லாதவர் கண்ணில்லாதவர் கண்ணுடையவர் இரக்கம் உடையவர். 57.7 காரியம் கெடாமல் இரக்கம் காட்டுவார்க்கு வயப்பட்டது இவ்வுலகம். 578 தண்டிக்கும் ஆற்றல் இருப்பினும் மனமிரங்கிப் பொறுத்துக் கொள்ளும் பண்பே சிறந்தது. 579 யாவரும் விரும்பும் நாகரிகம் உடையவர் நேரே நஞ்சிடினும் உண்டு அடங்குவர். 580 118 அரசியல் அதிகாரம் 58 கண்ணோட்டம் கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. 571 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. 572 பண்ணன்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். 573 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். 574 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும். 575 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். 576 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். 577 ဖွံဖြိုိ႕ சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்தில் வுலகு. 578 ಶ್ಗ பண்பினார் கண்ணும்கண் னோடிப் பாறுத்தாற்றும் பண்பே தலை 579 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். - 580 119