பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இச்சை அவனுடைய ருடியைக் கெடுத்துக் குற்றத்தினையும் அப்போதே கொடுக்கும்.

2. படுபயன் வெ.கிப் பழிப்படுவ செய்யார்

கடுவுஅன்மை நானு பவர்.

(ப-ரை) நடுவு - நடுவு நிலைமை, அன்மை . இல்லாமைக்கு, நாணுபவர் . வெட்கி அஞ்சுபவர்கள், படு . பிறர் பொருளைக் கவர்வதனால் வருகின்ற, பயன் . பயனை, வெஃகி - விரும்பி, பழிப்படுவ பழிக்கப்படும் செயல்களை, செய்யார் . செய்ய மாட்டார்கள்,

(க-ரை) நடுவு நிலைமை இல்லாதிருப்பதற்கு அஞ்சு பவர்கள் பின்னர் வரும் பயனை விரும்பிப் பழிக்கு ஆளாகக் கூடிய செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

3. சிற்றின்பம் வெ.கி அறன் அல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

(ப-ரை) மற்று இன்பம் - அறத்தான் வரும் நில ல. யுடைமை இன்பத்தினை, வேண்டுபவர் - காதலிப் பவர், சிற்றின்பம் - பிறர் உடைமையினை வஞ்சித்தடை யும் சிறிய இன்பத்தினை, வெஃகி . ஆசைப்பட்டு, அறன் . அறத்திற்கு, அல்ல - புறம்பான செயல்களை, செய்யார் . செய்ய மாட்டார்கள்.

(க-ரை அறத்தான் வரக்கூடிய நிலையான இன்பத் தினை விரும்புகிறவர்கள் பிறருடைய பொருளை வஞ்சித்து அடையும் சிறிய இன்பத்திற்கு ஆசைப்பட்டுத் தீய செயல் களைச் செய்யமாட்டார்கள்.

4. இலம்என்று வெகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மைஇல் காட்சி யவர்.

(ப-ரை புலம் வென்ற - புலன்கள் ஐந்தினையும்

அடிக்கி வெற்றிபெற்ற புன்மை - குற்றம், இல் . இல்லாத, ஆகியவர் - உணரும் அறிவு பெற்றவர்கள், இலம் -