பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

7. வேண்டற்க வெ.கி.ஆம் ஆக்கம் விளைவயின்

மாண்டற்கு அரிதாம் பயன்.

|ப-ரை) வெஃகி - அயலார் பொருளின் மேல் ஆசை கொண்டு, ஆம் ஆக்கம் - அதனால் வரும் செல்வத்தினை, வேண்டற்க . விரும்பாதிருப்பாயாக,விளைவயின் அப்படி அதனை நுகரும்போது, பயன் - உண்டாகின்ற பயன் என்பது, மாண்டற்கரிதாம் . நன்மையான தன்மையுடைய தாகவே இருக்காது.

(க-ரை) பிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கத் தினை விரும்பாதிருப்பார்களாக: அப்படிக் கவர்ந்தால் அனுபவிக்கும்போது அதன் பயன் நன்மையுடையதாக இருக்காது.

8. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன் கைப் பொருள்.

(ப-ரை) செல்வத்திற்கு - செல்வமானது, அஃகாமை . குறைந்து போகாதிருப்பதற்கு வழி, யாது . எது, எனின் . என்று ஆராய்ந்தால், பிறன் . மற்றவன், வேண்டும் . விரும்பிக் கொள்ளும், கைப்பொருள் - உரிமையான பொருளை, வெஃகாமை தான் வஞ்சித் தடைய விரும்பா திருத்தல் என்பதாகும்.

|க-ரை) செல்வமானது குறைந்து போகாமல் இருப் பதற்குக் காரணம் யாதென்று ஆராய்ந்தால், அது மற்றவனுக்கு உரிமையான பொருளினைத் தான் விரும்பன திருத்தல் வேண்டும் என்பதாகும்,

9. அறன்.அறிந்து வெ.கா அறிவுடையார்ச் சேரும்

திறன் அறிந்து ஆங்கே திரு. ப-ரை: அறன் - அறத்தினை, அறிந்து . நன்கு அறிந்து, வெஃகா - பிறனுக்குரிய பொருளினை அடைய விரும்பாத, அறிவுடையார் - அறிவுடையவர்களை, திரு.