பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தீவினை அச்சம

(தீமையான செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதலாகும்,

1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.

(ப-ரை) தீவினை தீயசெயல், என்னும் எனப்படும், செருக்கு - செருக்குடைய தன்மைக்கு, தீவினையார் . இச்செயல் நெஞ்சங் கொண்டவர்கள் தீவினையாளர்கள்) அஞ்சார் - அஞ்சமாட்டார்கள், விழுமியார் . சீரிய, சிறப்புடையவர்கள், அஞ்சுவர் - அச்சப்படுவார்கள்.

(கரை) தீய செயல் என்னும் செருக்குடைய

அறியாமைக்குத் தீவினையாளராகிய தீச்செயல் நெஞ்சங், கொண்டவர்கள் அஞ்சமாட்டார்கள். சீரிய சிறப்புடை யவர்கள் அச்சப்படுவார்கள்.

2. தீயவை தீய பயத்தலான் தீயவை

தீயினும் அஞ்சப் படும். (ப-ரை தீயவை - திச் செயல்கள், தீய - பின்னே தீமையினை, பயத்தலான் - கொடுப்பதால், தீயவை . தீச் செயல்கள், தீயினும் அஞ்சப்படும் . நெருப்பினைவிடக் கொடுமையானதென்று அஞ்சப்படும்.

(கரை) திச் செயல்கள் தீமையினையே கொடுப்பு. தால் தீச் செயல்கள் தீயினைவிடக் கொடுமையென்று. அஞ்சப்படும்.

3. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல், (ப-ரை செறுவார்க்கும் தமக்குத் துன்பம் செய் வார்க்கும், தீய தீமையான செயல்களை, செய்யாவிடல். செய்யாதிருப்பதை, அறிவினுள் - அறிவுச் செயல்கள், எல்லாம் - எல்லாவற்றிலும், தலை - தலையான