பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 1

அறிவாகும், என்ப - என்று பெரியோர்கள் சொல்லு வார்கள். -

(கரை) தமக்குத் துன்பம் உண்டாக்குபவர்களுக்கும் தீவினைகளைச் செய்யாமல் விடுதல் என்பதை அறிவுகள் எல்லாவற்றிற்கும் தலையாய அறிவு என்று நல்லோர் சொல்லுவர். -

4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

(ப-ரை) பிறன் - மற்ற வனுக்கு, கேடு - தீங்கினை, மறந்தும் - மறந்துங்கூட, சூழற்க . நினையாதிருப்பானாக , சூழின்-நினைப்பானாகில், சூழ்ந்தவன் . நினைத்தவனுக்கு, கேடு - தீங்கினை அறம் சூழும் . அறமானது நிலைத்து விடும். -

(கரை) ஒருவன் மறந்தேனும் பிறனுக்குத் தீமை தரும் செயல்களைச் செய்யாதிருப்பானாக; அப்படி நினைப்பானாகில் அவனுக்குத் தீங்கினை அறம் நினைக்கும். o

5. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.

!ப-ரை) இலன் - யான் வறியவன், என்று - என்பதாக எண்ணி, (அதனைப் போக்க) தீயவை - திய செயல்களை, செய்யற்க செய்யாதிருப்பானாக, செய்யின் - அவ்வாறு செய்வானே யாகில், பெயர்த்து - மீண்டும், இலன் . இல்லாதவன், ஆகும் - ஆவான்.

(கரை) நான் வறியவன் என்று நினைத்து அதனைப் போக்க ஒருவன் தீய செயல்களைச் செய்யாதிருப்பானாக. அப்படிச் செய்வானானால் மீண்டும் வறியவனாவான்.