பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102.

6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான். (ப-ரை) நோய்ப்பால - துன்பம் தரும் தன்மையுடை சவைகள், தன்னை - தன்னிடம் வந்து, அடல் - துன்புறுத்து. வதை, வேண்டாதான் - விரும்பாதவன், இப்பால - திய தன்மையுடைய செயல்களை, தான் - தான், பிறர்கண் செய்யற்க - மற்றவர்களுக்குச் செய்யாதிருப்பாளாக,

(க-ரை) தமக்குப் பின்பு துன்பங்கள் வந்து வருத்த வேண்டாமென்று நினைப்பவர்கள், பிறரிக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருப்பார்களாக.

7. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வியாது பின்சென்று அடும்.

(ப-ரை) எனைப்பகை - எப்படிப்பட்ட பெரிய பகை யினை, உற்றாரும் . உடையவர்களும், உய்வர் - ஒருகால் தப்பித்துக் கொள்வர், வினைப்பகை - தீவினையென்னும் பகையானது, வியாது - அவனைவிட்டு நீங்காமல், பின் - அவன் பின்னே, சென்று - போய், அடும் . அவனைக் கொன்றுவிடும்,

(க-ரை) எவ்வளவு பெரிய பகையுடையவர்களுல்ம் ஒருவாற்றால் ஒருகால் தப்பிவிடுவர். ஆனால், தீச் செயலாகிய பகை நீங்காமல் பின்னேயே போய்க். கொல்லும்.

8 தீயவை செய்தார் கெடுதல் கிழல்தன்னை

வியாது அடிஉறைக் தற்று.

(ப-ரை) தீயவை செய்தார் . தீமையான செயல் களைச் செய்தவர்கள், கெடுதல் . தாம் கெட்டு விடுதல் 1ளப்படிப்பட்டதென்றால்) நிழல் ஒருவனுடைய நிழலானது, தன்னை - அவனை, வீயாது - விடாமல் விந்து, அடி உறைந்தற்று - கால்களின் அடியிலேயே வந்து தங்கியது போன்றதாகும்.