பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

[க-ரை) பிறரிக்குத் தீங்கு செய்பவர்கள் தப்பாமல. கெடுவது எப்படியென்றால், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் அடியிலேயே தங்குவது போன்ற தன மையாகும்.

9. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்துஒன்றும்

துன்னற்க தீவினைப் பால்,

|ப-ரை) த ன் ைன த் தா ன் - தன்னையே தான்: காதலனாயின் - விரும்பி நேசிப்பானா கில், தீவினைப்பால் . தீவினையென்னும் தன்மையுடையவைகளுள், எனைத் தொன்றும் . எவ்வளவு சிறியதாக இருப்பது ஒன்றினைக் கூட, துன்னற்க-மற்றவர்களுக்குச் செய்யாதிருப்பானாக,

(க-ரை) ஒருவன் தன்னைத்தானே விரும்புவானா னால் சிறிதளவும் பிறனுக்குத் தீச்செயல் ஒன்றேயாயினும் செய்யாதிருப்பானாக,

10. அருங்கேடன் என்பது அறிக மருங்கு ஓடித்

தீவினை செய்யான் எனின்.

(ப-ரை) மருங்கு ஒடி - கொடுமையான வழியிலே போய், தீவினை - தீச்செயல்களை, செய்யான் . செய்யா திருப்பவன், எனின் - என்றால், (அப்படிப்பட்ட வ)ை அருங்கேடன் - கெடுதி என்பது அணுகாதவன், என்பது அறிக - என்பதனை அறிந்து கொள்ளுதல் வேண்டும்

(கரை) ஒருவன் கொடுமையான வழியிலே சென்று தீச்செயல்களைப் பிறருக்குச் செய்யாதிருப்பானானால் அவன் கெடுதி இல்லாதவன் என்பதனை அறிந்து கொள்ளு தல் வேண்டும்.