பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

ஒப்புரவினைப்போல, நல்ல - நல்ல தான, பிற பிேறவற்றை பெறல் அரிது - பெறுதல் என்பது அரிதானதாகும்.

(கரை) புத்தேள் உலகத்திலும் இவ்வுலகத்திலும் ஒப்புரவு போல (பிறர்க்கு உதவி செய்தல் போல) நல் பிற செயல்களைப் பெறுதல் அரிதாகும். - 3.

4. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும். .

(ப-ரை உயிர் வாழ்வான் . உயிருடன் வாழ்பவன் என்பவன், ஒத்தது - உலக நடைக்கு ஏற்ப, அறிவான் - அறிந்து ஒத்து வாழ்பவன் ஆவான், மற்றையான் - அவ்வாறு அறிந்து வாழாதவன், செத்தாருள் வைக்கப் படும் . செத்தவர்களுள் ஒருவனாக வைத்துக் கருதப் படுவான். - .

(கரை) உயிரோடு கூடி வாழ்பவன் என்பவன் உலக தடையினை அறிந்து வாழ்பவன் ஆவான். அவ்வாறு அறிந்து வாழாதவன் செத்தவர்களுள் ஒருவனாக வைத்துக் கருதப்படுவான். .

5. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகு அவாம்

பேரறி வாளன் திரு. -

(ப-ரை உலகு - உலக நடையான ஒப்புரவினை அவாம் - விரும்பி நடந்து கொள்ளும், பேர் . பெரியத் அறிவாளன் . அறிஞனிடம், திரு . செல்வம் நிறைந்திருப்ப தானது, ஊருணி - ஊரில் வாழ்பவர்கள் உண்ணுகின்ற குளம், நீர் . தண்ணிரினால், நிறைந்தற்று'. நிறைத் திருப்பது போன்றதாகும். ; : ఫ్లో

(கரை) உலக நடையினை அறிந்து நடக்கின்ற பேரறிஞனுடைய செல்வமானது ஊரில் வாழ்ப்வர்கள் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்திருப்பது போன்றி. தாகும். - . .

# *