பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

8. புயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்!

கயன்உடை யான்கண் படின்.

(ப-ரை) செல்வம் - செல்வம், நயன் - உதவி, உடை யான் கண் - செய்கின்றவனிடத்தில், படி ன் - உண்டாகி; இருக்குமானால், (அப்படி இருப்பது) உள்ளூர் - ஊர் நடுவில். பயன் - பயனைத் தருகின்ற, மரம் பழுத்தற் று - மரமானது. பழம் நிறைந்திருப்பது போன்றதாகும்.

(க-ரை) செல்வமானது ஒப்புரவு செய்பவனிடத்தில் உண்டாகி இருக்குமானால், அது பயன்படுகின்ற மரம், ஊர். நடுவே பழுத்திருப்பது போன்றதாகும்.

7. மருந்துஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.

(ப-ரை) செல்வம் - செல்வம், பெருந்தகையான் கண் - ஒப்புரவு செய்யும் சிறந்த பெருந்தகையாளனிடம், படின் . உண்டாகி இருக்குமேயானால், (அச்செல்வம்) மருந்தாகி எல்லா உறுப்புக்களினாலும் நோய்க்கு மருந்தானதாகி, தப்பா மரத்தற்று - மற்றவர்க்குப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரத்தினை ஒத்ததாகும்.

(க-ரை) செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகை. யாளனிடத்தில் உண்டாகி இருக்குமேயானால், அது பிணிகட்கு எல்லா உறுப்புக்களினாலும் மருந்தாகித். தப்பாத மரத்தினை ஒப்பதாகும்.

8. இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடன் அறி காட்சி யவர்.

(ப-ரை) கட்ன் - தாம் செய்யத் தகுந்த கடமைகளை, அறி அறிந்த, காட்சியவர் - இயற்கையறிவினையுடைய பெரியவர்கள், கடன் ஒப்புரவு செய்தற்கேற்ற செல்வம், இல் - இல்லாமல் குறைந்த, பருவத்தும் - காலத்திலும்,