பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

ஒப்புரவிற்கு-மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு, ஒல்கார். மனம் தளர மாட்டார்கள்.

(க-ரைi தாம் செய்யத் தகுவனவற்றை அறிந்த, இயற்கை அறிவுடையவர்கள், செல்வம் சுருங்கிய காலத்தி லும் ஒப்புரவு செய்வதற்குத் தளர மாட்டார்கள்.

9. கயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்ரே

செய்யாது அமைகலா ஆறு.

(ப-ரை) நயனுடையான் - ஒப்புரவு செய்யும் தன்மை யாளன், நல்கூர்ந்தான் . வறுமையுடையவன், ஆதல் . ஆனான் என்பது (என்னவென்றால்) செய்யும் - தவறாமல் செய்கின்ற, நீர்மை - தன்மையுடைய ஒப்புரவுகளை, செய்யாது - செய்ய முடியாமல், அமைகலா ஆறு - வருந்து, கின்ற நிலைமையேயாகும்,

(கரை) ஒப்புரவு செய்பவனுக்கு வறுமை என்பது யாதென்றால், தவறாமல் செய்கின்ற ஒப்புரவினைச் செய்ய முடியாமல் வருந்தி இருக்கும் நிலைமையே ஆகும்.

10. ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃது.ஒருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து.

(ப-ரை) ஒப்புரவினால் - உதவி செய்வதால், கேடு - கெடுதி, வரும் - வருவதாகும், எனின் - என்று சொல்லுபவரி உண்டானால், அஃது - அக் கெடுதியானது, ஒருவன் . ஒருவன், விற்று . தன்னை விற்றாகிலும், கோள்தக்கது." அதனைக் கொள்ளும் தகுதியினை, உடைத்து - உடைய தாகும். .

(கரை) ஒப்புரவு செய்வதால் கேடு வரும் என்று. சொல்லுபவர்கள் இருப்பார்களேயானால், அப்படிப்பட்ட கெடுதி ஒருவன் தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதி: யினை உடையதாகும்.