பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23, ஈகை

1வறியவர்களுக்குக் கொடுத்தல் என்பதாகும்)

1. வறியார்க்கு ஒன்றுஈவதே ஈகைமற்று எல்லாம்

குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

(ப-ரை வறியார்க்கு - ஒரு பொருளும் இல்லாத வறியவர்களுக்கு, ஒன்று ஈவதே ஒரு பொருளைக் கொடுப்பதுதான், ஈகை - உதவி செய்வதாகும், மற்றெல் லாம் . மற்ற வகையில் கொடுப்பதெல்லாம், குறி யெதிர்ப்பை - குறிப்பாகப் பின்னர் வரக்கூடிய பயனைக் கருதிய, நீரது உடைத்து - தன்மையினை உடையதாகும்.

|க-ரை) யாதொரு பொருளும் இல்லாதவர்களுக்கு

ஒன்றினைக் கொடுப்பதே ஈகையாகும். அப்படிப்பட்ட

வர்கள் அல்லாதவர்க்குக் கொடுப்பது பின்வரும் பயனைக் கருதிக் கொடுக்கும் தன்மையுடையதாகும்.

2. கல்ஆறு எனினும் கொளல்தீது மேல் உலகம்

இல்எனினும் ஈதலே கன்று.

|பரை) கொளல் யாசித்துக் கொள்ளுதல், நல் . நல்ல, ஆறு - நெறி, எனினும் என்பவர் இருந்தாலும், இது - அச்செயல் தீமையானதேயாகும், (வறியவர்களுக்குக் கொடுத்தால்) மேல் உலகம் . மேல் உலகம் என்பது, இல் - இல்லை, (கிடையாது), எனினும் . என்றாலும், ஈதலே நன்று - கொடுப்பதுதான் (ஈகைதான்) நல்லதாகும்.

(க-ரை) இரப்பது (யாசிப்பது) நன்னெறியாகும் என்று சொல்லுபவர்கள் இருந்தாலும் அது தீதான செயலாகும். *ஈகையினைச் செய்வதால் மேலுலகம் அடைய முடியா :தென்று சொன்னாலும் சதலே நன்று.