பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

3. இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள.

(ப-ரை) இலன் - யாம் ஏதுமில்லாமல் வறுமையிலுள்ள ளோம், என்னும் - என்று கூறும், எவ்வம் இழிவினை, உரையாமை யாசிப்பவன் பிறரிடத்தில் போய்ச்சொல்லா திருக்குமாறு, ஈதல் - நிறைய கொடுக்கும் தன்மை, குலன் - நற்குடியில், உடையான் கண்ணே - பிறப்பினை உடையவ னிடத்தில், உள - உண்டாகி இருப்பதாகும்.

(கரை) தான் வறியவன் என்று சொல்லி வந்தவர்" களுக்கு இல்லையென்று சொல்லாமல் கொடுப்பதே நல்ல குடியில் பிறந்தவர்களிடத்தில் காணப்படும் நற்குணமாகும்.

4. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகம் காணும் அளவு.

(ப-ரை) இரந்தவர் - யாசித்தவரது, இன்முகம் . |யாசித்துப் பொருள் பெற்றதால் உண்டாகும்) இனிய முகத்தினை, காணுமளவு - பார்க்கின்றவரை, இரக்கப் படுதல் - யாசிப்பதேயல்லாமல் யாசிக்கப்படுதலும், இன்னாது - இன்பம் தருவது ஆகாது (துன்பமேயாகும்).

(க.ரை யாசிப்பது மட்டும் அல்லாமல் யாசிக்கப் படுவதும் இன்பம் தருவது அல்ல; எதுவரைக்கும் என்றால், ஒரு பொருளை யாசிப்பவரது இனிய முகத்தினைக் காணுகின்றவரைக்கும் என்பதாகும்.

5. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின், (ப.ரை) ஆற்றுவார். ஆற்றல் பெற்ற தவத்தோருக்கு, ஆற்றல் - வல்லமை என்னவென்றால், பசி - தமக்குண். டான பசியை, ஆற்றல் - பொறுத்துக் கொள்ளுதலாகும் lபொறுத்துக் கொள்ளும் வல்லமையாகும்) அதுவும், அப்பசியை - அப்படிப்பட்ட பசியை, மாற்றுவார் . உணவ.