பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

ரித்து நீக்குகின்றவர், ஆற்றலின் - பெற்றிருக்கும் வல்லமைக்கு, பின் - பின்னேயாகும்.

(கரை) தவம் செய்பவர்களுக்கு வல்லமை எதுவென் றால் தமக்கு உண்டாகும் பசியைப் பொறுத்துக் கொள்ளுத லாகும். அந்த வல்லமையும் பொறுத்தற்கரிய அப்பசியைப் போக்குபவரது வல்லமைக்குப்பின் என்று சொல்லப்படும்.

6. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

(ப-ரை) அற்றார் . ஒன்றுமில்லாதவரது, அழி - மிகுந்த, பசி - பசிபினை, தீர்த்தல் - நீக்குதல் வேண்டும், அஃது - அப்படிச் செய்வதானது, பொருள் பொருளினை, பெற்றான் - பெற்று வைத்திருக்கும், ஒருவன் . ஒருவன், வைப்புழி - அப்பொருளைத் தனக்குப் பயன்படுமாறு வைக்க வேண்டிய இடம் அதுவேயாகும்.

(கரை) வறியவர்களது கொடிய பசியை அறம் நோக்கிப் போக்குதல் வேண்டும். அப்படிச் செய்வதாவது, ஒருவன் தான் பெற்றிருக்கும் பொருளினைத் தனக்குப் பயன்படும்படியாக வைக்கும் இடம் என்று கருதப்படும். அந்த அறமே இடமாகும்.

7. பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.

(புரை! பாதிது - பகுத்துக் கொடுத்து, ஊண் - பிறரும் தானும் உண்ணுதலை, மரீஇயவனை . மேற் கொண்டு பழகிய ஒருவனை, பசி. பசி, என்னும் என்று சொல்லப்படும், தீப்பிவி . கொடிய நோய், திண்டல்". தீண்டுதல், அரிது - இல்லையாகும்.

|க-ரை எப்போதும் பகுத்துப் பிறர்க்குக் கொடுத்து ..உண்ணப் பழகிய ஒருவனை, பசி என்று சொல்லப்படும் கொடிய நோய் தீண்டுதல் இல்லை.