பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மாஞாலம் . பெரிய இப்பூமியில் வாழ்பவர்கள், கரி - சான்று ஆவார்கள்.

(கரை) அருளுடையவர்களுக்குத் துன்பம் உண்டா காது. காற்று இயங்குகின்ற வளப்பத்தினையுடைய பெரிய ஞாலத்தில் வாழ்கின்ற மக்களே அதற்குச் சான்றாவார்கள்

8. பொருள்.நீங்கிப் பொச்சாந்தார் என்ப அருள் நீங்கி

அல்லவை செய்துஒழுகு வார்.

(ப-ரை) அருள் - அருளினை, நீங்கி - தவிர்த்து, அல்லவை . தீமையென்னும் கொடுமைகளை, செய்து ஒழுகுவார் . செய்து நடிப்பவர்கள், பொருள் நீங்கி . உறுதிப் பொருள்களை விட்டு நீங்கி, பொச்சாந்தார் - தாம் துன்புறுவதை மறந்தவர், என்ப என்று உயர்ந்தோரி கூறுவார்.

(கரை) உயிர்களிடம் காட்டப்படும் அருளிலிருந்து நீங்கிக் கொடுமைகளைச் செய்து நடப்பவர்கள் உறுதிப் பொருளைச் செய்யாமல் தாம் துன்புறுகின்றமையை மறந்தவர்கள் என்று சொல்லப்படுவார்கள்.

7. அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்

இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (இல்லார்க்கு

|ப-ரை) பொருள் - செல்வம் என்னும் பொருள், இல்லார்க்கு - இல்லாதவர்களுக்கு, இவ் உலகம் - இந்த உலகத்து இன்பம், இல் லாகியாங்கு. இல்லை ஆனாற்போல, அருளில் லார்க்கு அருள் இல்லாதவர்களுக்கு, அவ்வுலகம். அந்த உலகப் பேரின்பம், இல்லை - இல்லையாகும்.

(க-ரை) பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையா தலைப் போல, உயிர்கள் மீது அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகப் பேரின்பம் இல்லையாகும்.

8. பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்

அற்றார்மற்று ஆதல் அரிது.

(ப-ரை) பொருள் - செல்வம், அற்றார் . இல்லாமல்

வறியரானவர், ஒருகால் மற்றொரு காலத்தில், பூப்பர்.