பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

செல்வம் பெற்றுத் திகழ்வர், அருள் . அருள், அற்றார் - (இல்லாமல்) அற்றவர்கள், அற்றார் . அழிந்தவரே யாவர், மற்று மீண்டும், ஆதல் அரிது - (பிறகு எக்காலத் திலும்) ஆவது இல்லை.

(க-ரை வறுமையிலிருந்தோர் ஒரு கால த் தி ல் செல்வத்தில் மிகுந்தோர் ஆவர். அவ்வாறு இல்லாமல் அருள் அற்றவர் அழிந்தோரேயாவர். பின்பு ஒரு காலத்திலும் அருளுடையவர் ஆவது இல்லை,

9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

|ய.ரை அருளாதான் - அருளில்லாதவன், செய்யும் அறம் - செய்கின்ற அறத்தினை, தேரின் ஆராய்ந்து பார்த்தால், தெருளாதான் - முனிவர்களுக்குரிய ஞான மில்லாதவன், மெய்ப் பொருள் . மெய்ப் பொருளினை, கண்டற்று - உணர்ந்து கண்டது போன்றதாகும்.

(க-ரை) உயிர்களிடத்தில் அருளில்லாதவன் செய் கின்ற அறத்தினை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் ஒரு கால் மெய்ப்பொருளை உணர்ந்தது போன்றதாகும்.

10. வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.

(ப-ரை) தான் - அருளில்லாதவன், தன்னின் - தன்னை விட, மெலியார்மேல் - எளியவர்கள் மேல், செல்லுமிடத்து - அவர்களை நவியச் செல்லும் போது, வலியார் . தன்னை விட வலிமையுடையவர், முன் - முன்னே, தன்னை - தான் பயந்து நிற்கும் தன்மையினை, நினைக்க நினைத்துப் பார்த்தல் வேண்டும்.

|கடரை அருளில்லாதவன் தன்னைவிட எளியவர்கள் மீது அவர்களை நலியச் செய்யத்தான் செல்லும்போது,