பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

8. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன். (ப-ரை செயிரின் அஞ்ஞானமான குற்றத்தினின்றும், தலைப்பிரிந்த - விட்டு நீங்கிய, காட்சியார் - மெய்யறி அடையார், உயிரின் பிற உயிரிலிருந்து, தலைப்பிரிந்த . நீக்கப்பட்டு வந்த, ஊன் உண்ணாt - ஊனினை உண்ண மாட்டார்கள்.

(க-ரை அஞ்ஞானமாகிய குற்றத்திலிருந்து நீங்கிய அறிவினையுடையவர்கள், ஒர் உயிரிலிருந்து நீங்கி வந்த :ஊனினை உண்ணமாட்டார்கள்.

9. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை கன்று.

(ப-ரை அவி - நெய் முதலானவைகளை, சொரிந்து . நெருப்பினில் ஊற்றி, ஆயிரம் - ஆயிரம், வேட்டலின். வேள்வியினை (யாகம்) செய்வதைவிட, ஒன்றன் - ஒரு விலங்கினது, உயிர் - உயிரினை, செகுத்து . போக்கி, உண்ணாமை நன்று - அந்தப் புலாலை உண்ணாதிருத்தல் நல்லதாகும்.

(க-ரை நெய் முதலியவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட ஒரு விலங்கின் உயிரினைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நல்லதாகும்.

10. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.

|ப-ரை) கொல்லான் . எந்த உயிரையும் கொல்லாத வனாகி, புலாலை . புலால் உண்ணுதலை, மறுத்தானை . மறுத்தவனுமான அருளாளனை, எல்கா.எல்லா, உயிரும் - உயிர்களும், கைகூப்பித் தொழும் - கைகுவித்துத் தொழும்.

(க-ரை) ஓர் உயிரினையும் கொல்லாதவனுமாகி புலாலையும் உண்ணாதவனை எல்லா உயிரும் கை கூப்பித் தொழும். -