பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. தவம்

(தவம் இன்னதென்பதும் தவசிகளின் சிறப்பும், ஆற்றலும்)

1. உற்றநோய் கோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாடிை

அற்றே தவத்திற்கு உரு.

|ப-ரை) தவத்திற்கு - தவத்தினுக்கு, உரு உருவமானது (என்னவென்றால் உற்ற தம் உயிர்க்கு வருகின்ற, நோய் . துன்பங்களை, தோன்றல் - பொறுத்துக் கொன் ளுதலும், உயிருக்கு - மற்ற உயிர்களுக்கு, உறுகண் . துன்பத்தினை, செய்யாமை செய்யாதிருத்தலுமாகும், அற்றே - தவம் என்பது அவ்வளவுதான்.

(கரை) தவத்திற்கு வடிவம் என்னவென்றால், தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுவதும் தாம் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருப்பதுவுமே யாகும்.

2. தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம் அதனை

அ.து.இலார் மேற்கொள் வது.

(ப-ரை) தவமும் - தவத்தினைச் செய்வதும், தவ. முடையவர்க்கு தவத்தன்மை (முன்தவம்) உடையவர் களுக்கே, ஆகும் . உண்டாவதாகும், அதனை - அத்தவத் திணை, அஃது . அத்தவப்பிறப்பு, இலார் - இல்லாதவர்கள், மேற்கொள்வது . செய்ய முயற்சிப்பது, அவம் . வீணான செயலாகும்.

|க-ரை) தவத்தினை மேற்கொள்ளுவ தென்பதும் முற்பிறவித் தவத் தன்மையுடையவர்களுக்கேயாகும். அத். தவப் பிறவி இல்லாதவர்கள் தவம் செய்ய முயல்வது பயனற்ற முயற்சியேயாகும்.