பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

3. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்.

|ப-ரை) மற்றையவர்கள் . இல்லறத்தினை மேற் கொண்டவர்கள், துறந்தார்க்கு - துறவிகளுக்கு, துப்புரவு 0வண்டி . உணவு முதலியன கொடுத் ததுவ விரும்பி, தவம். தவம் செய்வதை, மறந்தார் கொல் . மறந்து விட்டார்கள் போலும்,

(க-ரை! இல்லறத்தினை மேற்கொண்டவர்கள் துறவி களுக்கு உணவு முதலியன கொடுத்து உதவ வேண்டித் தவம் செய்வதை மறந்துவிட்டார்கள் போலும்!

4. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும்.

|ப-ரை ஒன்னார் - பகைவரை, தெறலும் . அழியச் செய்தலையும், உவந்தார் - தாம் விரும்பின வரை, ஆக்க லும் - மேலாகச்செய்தலையும், எண்ணின் - தவம் செய்வாரி மனத்தில் எண்ணு வாரானால், தவத்தான்வரும் - தமது

தவ வலிமையால் அவருக்கு அந்த ஆற்றல் வருவதாகும்.

(க.ஏை) பகைவரை அழித்தலும் விரும்பினவரை உயரச் செய்தலும் ஆகிய இவ்விரண்டினையும் தவசிகள் நினைத்தால் தவ வலிமையால் அவருக்கு நடைபெறுவன வாகும்.

5. வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

(ப.ரை) வேண்டிய - தாம் அடைவதற்கு விரும்பிய பயன்களை, வேண்டியாங்கு-விரும்பியபடியே, எய்தாைன். பெறுதலால், செய் செய்யப்படும், தவம் - தவமானது, ஈண்டு . இப் பிறப்பில், முயலப்படும் - முயன்று செய்யப் படுவதாகும். -

(கரை) வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறலாம் ஆனபடியால் செய்யப்படுவதாகிய தவம் இப் பிறப்பில் முயன்று செய்யப்படும்.