பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 31

8. மனத்தது மாசு.ஆக மாண்டார்ர்ே ஆடி

மறைத்துஒழுகும் மாந்தர் பலர்.

(ப-ரை) மாசு - குற்றமானது (அழுக்கு), மனத்தது - மனத்தின் கண், ஆக இருக்க, மாண்டார் - சிறந்த தூய்மை யுடையவர்கள் போல், நீர் - நீரில், ஆடி . மூழ்கிக்காட்டி, மறைந்து - அச்செயலில் மறைந்து, ஒழுகும் . தீயநெறியில் நடந்து கொள்ளுகின்ற, மாந்தர் பலர் . மக்கள் உலகத்தில் பலருண்டு.

(க-ரை) அழுக்காகிய குற்றம் தங்கள் மனத்தில் இருக்க மாட்சிமையுடையவராக நீரில் மூழ்கிக் காட்டித் தாம் அந்தத் தோற்றத்தில் மறைந்து வாழும் மாந்தர் உலகில் பலராவர்.

9. கணைகொடிது யாழ்கோடு செவ்விது

வினைபடு பாலால் கொளல். (ஆங்குஅன்ன

(ப.ரை கணை - அம்பானது (நேராக இருந்தாலும்) கொடிது - செய்கையில் கொடுமை செய்வதாகும், யாழ். யாழானது, கோடு - கோணலாக வளைந்து இருந்தாலும். செவ்விது - செயலினால் நன்மை செய்வதாகும், ஆங்கு அன்ன - அவ்வகையினைப் போல், வினைபடுபாலால் . அவரவரது செயல்களின் வேறுபாடுகளினால், கொளல் . அவரை அறிந்து புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

(கரை) அம்பு, வடிவத்தில் நேராக இருந்தாலும் செயலால் கொடியதாகும். யாழ், வளைவுள்ளதாக இருந் தாலும், செயலால் நல்லதாகும். அதுபோல், மக்களைத் தோற்றத்தால் அறிந்து கொள்ளாமல் செயலினால் அறிந்து கொள்ளல் வேண்டும்.

10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின். (ப-ரை) உலகம் - உலகத்து உயர்ந்தோரால்,பழித்தது. குற்றமாகக் கூறப்பட்ட தீய ஒழுக்கத்தினை, ஒழித்துவிடின்.