பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

ஒழித்து விடுவார்களேயானால், அதுவே போதும்; மழித்தலும் அவர்கள் (தவத்திற் கென்று) தலைமயிரை மழித்துக் கொள்ளுதல், நீட்டலும் சடையாக்கி வளர்த்துக் கொள்ளுதலும் (ஆகிய வேடம்) வேண்டா - வேண்டுவன அல்லவாம்.

(கரை) தவம் செய்பவர்களுக்குத் தலைமயிரை மழித் தலும் அல்லது சடையாக்கலும் ஆகிய வேடம் தவம் செய்வதற்கு என்று தேவையில்லை. தவத்திற்கு ஆகாதது என்ற தீமையான ஒழுக்கத்தினை நீக்கி விட்டாலே போது மானதாகும்.

29. கள்ளாமை

(பிறருடைய பொருளைக் களவு

செய்தற்கு கினையாமை)

1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்

கள்ளாமை காக்கதன் கெஞ்சு.

(ப-ரை) எள்ளாமை - பிறரால் இகழாதிருப்பதனை, வேண்டுவான் - விரும்புகின்றவன், என்பான் . என்பவன், எனைத்தொன்றும் . எந்தவொரு பொருளினையும், கள்ளாமை கவர்ந்து கொள்ள எண்ணாதிருக்கும்படியாக, தன் . தனது, நெஞ்சு - நெஞ்சத்தினை, காக்க காத்துக் கொள்ளுவானாக. w

(கரை) பிறரால் இசுழப்படாமல் இருக்கவேண்டும்

என்று எண்ணுபவன் யாதொரு பொருளினையும் கள்ளத்

தனத்தினால் அடையக் கூடிய எண்ணம் புகாதபடி தனது நெஞ்சினைக் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.