பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

2. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள் வேம் எனல்,

[u-607] பிறன் . பிறனுக்குரிய, பொருளை - பொருளினை, கள்ளத்தால் - கள்ளத்தனத்தால், கள் வேம் எனல் - திருடிக்கொள்ளுவோம் என்று கருதுதல், உள்ளத் தால்-தமது உள்ளத்தினால்கூட, உள்ளலும். எண்ணுவதும், தீதே - தீமையானதேயாகும்.

{க-ரை) குற்றங்ளைத் தனது நெஞ்சம் நினைப்பதுவும் துறந்தார்க்குத் தீமையாகும். ஆதலால், பிறன்பொருள்ை அவன் அறியாதபடி கள்ளத்தனத்தால் கவர்ந்து கொண்டு விடுவோம் என்று நினையாதிருப்பாயாக!

3. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

(ப-ரை) களவினால் - கள்ளச் செய்கையால், ஆகிய ஆக்கம் - உண்டாவதான செல்வமானது, ஆவதுபோல . அதிகமாவது போலக் காட்டி, அளவு - அந்த அளவினையும் இறந்து - கடந்து, கெடும் - கெட்டு மறையும். -

(க-ரை) களவினால் உண்டாகின்ற பொருள் வளர்வது போலத் தோன்றி அளவினைக் கடந்து அழியும். மேலும் அது பற்பல துன்பங்களையும் கொடுத்து அறத்தினையும் கொண்டு போகும்.

4. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும். Y (ப-ரை களவின் கண் - களவு செய்வதில், கன்றிய - மிகுந்திருக்கும், காதல் - விருப்பமானது, விளைவின்கண் . பயனைத் தரும்போது, வீயா - தொலைக்க முடியாத, விழுமம் தரும் . துன்பத்தினைந் தத்து விடுவதாகும். +

(கரை) களவு என்பதில் இருக்கும் வேட்கை அப்போது இனிது போலத் தோன்றிப் பயன் தரும்போது என்றும்

நீங்காத துன்பத்தினைத் தந்துவிடும். -