பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

தான நல்ல பிற அறங்கள் என்பவை, இல்லை - கூறப்பட வில்லை.

(கரை) யாம் மெய்ந்துரல்களாகக் கண்டவற்றுள் எத்தன்மையாலும் வாய்மையினை விட மேலானதாகக் கூறப்படும் அறமே இல்லை என்பதாகும்.

31. வெகுளாமை (கோபத்தினால் வரும் தீமைகளும் அதனை நீக்குதலும்).

1. செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான் 4 காக்கின்என் காவாக்கால் என். 1அல்லிடத்து. (ப-ரை) சினம் . சினம் (கோபம்) என்பதனை, செல்” சென்று பலிக்கும், இடத்து இடத்தில், காப்பான் - வாரா மல் காப்பவனே, காப்பான் . தன்னைக் காப்பவனாவான், அல்லிடத்து - மற்றபடி கோபம் பலியாதவிடத்தில், காக்கில் என் வராமல் தடுத்தால்தான் என்ன பயன்’ காவாக்கால் என் தடுக்காவிட்டால்தான் என்ன பயன்?

[க-ரை) சினம் பலிக்குமிடத்தில் அதனை வராமல் காப்பவனே அருளால் காப்பவனாவான்: அது பலிக்காத இடத்தில் அதனைத் தடுத்தால் என்ன? தடுக்காமல் இருந். தால் என்ன? -

2. செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்

இல் அதனின் தீய பிற.

(ப-ரை சினம் . சினமானது, செல்லா பலிக்காத, இடத்து தன்னைவிட - வலியவர் மீது சென்றால், நீது . தனக்கே தீமையாக முடியும், செல்லிடத்து . தன் னின் மெலியவர்மீது செல்லும்போது, அதனின் - அந்தக் கோபத்தினைவிட, தீய - தீமையினைத் தருவது, பிறஇல் . வேறு எதுவும் இல்லை. *