பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

[க-ரை) சினத்தில் மிகுந்து இருப்பவர்கள் உயிரோ டிருப்பவர்களேயானாலும் செத்தவருக்கு ஒப்பாவார்

அந்தச் சினத்தினை விட்டவர்கள், உடம்பால் காதல் தன்மையரேயானாலும் இல்லாதவர்களுக்குச் ❖ LÜtዕüዮ வார்கள்.

32. இன்னா செய்யாமை

(பிற உயிர்களுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாமை)

1. சிறப்பு:ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள். (ப-ரை! சிறப்பு - தவமாகிய சிறப்பினாலே, ஈனும் . அடையப் படுவனவாகிய, செல்வம் பெறினும் - செல்வங் களைப பெறலாம் என்றாலும், பிறர்க்கு மற்றவர்களுக்கு, இன்னா - துன்பம் உண்டாக்குபவைகளை, செய்யாமை. செய்யாதிருத்தல், மாசு - குற்றம், அற்றார் - இல்லாத வரது, கோள் - துணிவு என்பதாகும்.

|க-ரை பிறர்க்குத் துன்பம் செய்து தவமாகிய சிறப்புத் திரும் செலவங்களைப் பெறலாம் என்றாலும், அதனைச் செய்யாதிருப்பதே மனம் மாசற்றவரது துணி பாகும்.

2. கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள், . |ப-ரை) கறுத்து தம்மீது கோபங் கொண்டு, இன்னா. துன்பத்தினை, செய்த அக்கண்ணும் - செய்த போதும், மறந்து . மீண்டும், இன்னா செய்யாமை - துன்பம் தருவனவற்றைத் தாம் திரும்பச் செய்யாதிருத்தல், மாசற்றார் - மனத்தில் குற்றமற்றவரது, கோள் - குறிக் கோளும் துணிவுமாகும். . ..