பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

|க-ரை) தம்மேல் கோபம் கொண்டு ஒருவன் துன்பம் தருபவற்றைச் செய்தான் என்றாலும் மீண்டும் தாம் அவனுக்குத் துன்பம் செய்யாமை மாசற்ற தவசிகளின் துணிபாகும். .

3. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்.

|ப-ரை செய்யாமல் - தான் முன்பு துன்பத்தினைச் செய்யாதிருந்தும், செற்றார்க்கும் . தன்மீது கோபம்) . கொண்டவர்க்கும், இன்னாத - துன்பத்தினை, செய்தபின் - தவசி செய்வானாகில், உய்யாவிழுமம் - த ப் பி க் க முடியாத துன்பத்தினை, தரும் - அவனுக்குத் தந்துவிடும்.

(க-ரை தான் முன்பு ஒரு தீமையும் செய்யாதிருக்கத் தன்மேல் கோபம் கொண்டவர்க்குத் துன்பத்தினை முனிவன் செய்வானானால் அச் செயல் அவனுக்குக் கடக்க முடியாத துன்பத்தினைத் தரும்.

4. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்கான

கன்னயம் செய்து விடல். (ப-ரை) இன்னா - துன்பத்தினை, செய்தாரை . தமக்குச் செய்பவரை, ஒறுத்தல் - துறந்தார் தண்டித்தல் என்பது, அவர் . அத்துன்பம் செய்தவர், நாண - தாமே நாணம் அடையும் படியாக, நன்னயம் - இனிமையான நன்மைகளை, செய்துவிடல் . செய்து, அவ்விரண்டையும் அப்போதே மறந்துவிடுதலாகும்.

(க-ரை) தமக்குத் துன்பம் செய்தவர்களைத் துறந்த வர்கள் தண்டித்தல் என்பதானது, அத்துன்பம் செய்த வர்கள் தாமே நாணம் அடையும்படி அவர்கட்கு இனிமையானவற்றைச் செய்து அவ்விரண்டையும் மறந்து விடுதலாகும். , - I

தி. தெ.-10