பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

துறவறத்தினை மேற்கொண்டவர்கள், எல்லாம் . எல்லா ருள்ளும், கொலை அஞ்சி - கொலைத் தீமையினை அஞ்சி, கொல்லாமை.கொல்லாமை அறத்தினை, சூழ்வான் தலை. மேற்கொண்டவன் சிறந்தவன்.

(கரை) பிறப்பு என்ற நிலையினை அஞ்சி ஆசை யெல்லாம் விட்ட நீத்தார்களுள் எல்லாம் கொலைத் திமையினை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தினை மறவாதவன் உயர்ந்தவனாவான். 8. கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிர்உண்ணும் கூற்று. (ப-ரை) கொல்லாமை .ெ கா ைல செய்யாமை என்பதனை, மேற்கொண்டு - நோன்பாக மேற்கொண்டு, ஒழுகுவான் - நடந்து கொள்ளுபவனது, வாழ்நாள் மேல். வாழுகின்ற நாளில் அவனுடைய ஆயுளின் மீது, உயிர் உண்ணும் . உயிரினைக் கொண்டு செல்லும், கூற்று . கூற்றுவன், செல்லாது - செல்லமாட்டான்.

(கரை) கொல்லாமையினை நோன்பாகக் கொண்டு ஒழுகுவானது வாழ்நாள் மேல் உயிரினை உண்ணுகின்ற கூற்றுவன் சொல்லமாட்டான்.

7. தன் உயிர் ப்ேபினும் செய்யற்க தான்பிறிது - இன்உயிர் நீக்கும் வினை.

ப-ரை தன் . தன்னுடைய, உயிர் - உயிரானது, நீப்பினும் - நீங்கிப் போவதேயானாலும், செய்யற்க . செய்யாதிருப்பானாக (எதனை) தான் - தான், பிறிது . பிற ஒன்றினது, இன் - இனிமையான, உயிர் . உயிரினை, நீக்கும் வினை நீக்குதலாகிய தொழிலினை என்பதாகும்.

(கரை) ஒருவன் தன்னுடைய உயிர் நீங்கிப் போகுமே யானாலும், தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பினின்றும் நீக்கும் தொழிலினைச் செய்யா திருப்பானாக.