பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

8. கன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

கொன்றாகும் ஆக்கம் கடை.

{ப-ரை) நன்று - நல்லபடியாக, ஆகும் - ஆகின்ற: ஆக்கம் - செல்வமானது, பெரிது எனினும் . பெரிதாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும், சான்றோர்க்கு. துறவறத்தால் சிறந்த பெரியோர்களுக்கு, கொன்று . கொலை செய்து, ஆகும் ஆக்கம் - ஆவதாகிய செல்வ மானது, கடை - இழிவானதேயாகும்.

(கரை) கொலை செய்வதால் நன்மையாக ஆகின்ற செல்வம் பெரிதுதான் என்று கூறப்பட்டாலும், துறவால் அமைந்த சான்றோர்களுக்கு உயிரைக் கொல்லுவதனால் வரும் செல்வம் இழிவானதாகும்.

9. கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவார் அகத்து.

(ப-ரை) கொலை - கொலை செய்வதனை, வினையர் ஆகிய - தொழிலாகக் கொண்ட, மாக்கள் - மாந்தர், புன்மை - அத்தொழிலின் இழிவினை, தெரிவார் - அறிந்த பெரியோர்களின், அகத்து - நெஞ்சத்தில், புலைவினையர்புலைத் தொழிலினைச் செய்பவராகக் கருதப்படுவர்.

(கரை) .ெ கா ைல த் தொழிலினையுடையவராகிய மக்கள் அத்தொழிலின் கீழ்மையை அறிந்தவர் நெஞ்சத்தில் அவர் புலைத் தொழிலினராகக் கருதப்படுவர்.

10. உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்

செல்லாத்தி வாழ்க்கை யவர்.

(ப-ரை) செயிர் உடம்பின் - காணக்கூடாத நோய் உடம்புடனே, செல்லாத்தி - வறுமையுள்ள இழிதொழில், வாழ்க்கையவர் . வாழ்க்கையுடையவர்களை, (அவர்கள்) உயிர் . உயிர்களை, உடம்பின் - (முன்னர் உடம்புகளி விருந்து, நீக்கியார் என்ப நீக்கியவர்கள் என்று

அறிந்தோர் கூறுவார்கள். -