பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

க-ரை! பார்க்கக் கூடாத நோயுடம்புடனே வறுமை. யுள்ள வாழ்க்கை யினை புடையவர்களை, முற்பிறப்பில் உயிர்களின் உடம்பினின்றும் நீக்கியவர்கள் என்று. அறிந்தோர் கூறுவார்கள், -

34. நிலையாமை

(தோற்றமுடையன யாவும் நிலை பெறாதவைகளாகும்)

1. கில்லா தவற்றை நிலையின என்றுனரும்

புல்லறிவு ஆண் மை கடை.

(ப-ரை நில்லாதவற்றை - நிலையில்லாதவைகளை எல்லாம், நிலையின நிலைத்து நிற்பன, என்று என்பதாக, உணரும் உணருகின்ற, புல்லறிவாண்மை . புன்மையான அறிவினை உடையவராக இருத்தல், கடை , இழிவானதாகும்.

(க-ரை) நிலையில்லாத பொருள்களை நிலையானவை என்று கருதுகின்ற புன்மையான அறிவு துறந்தார்க்கு இழிவாகும்.

2. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிங் தற்று. (ப-ரை) பெரும் . பெரிய, செல்வம் - (ஒருவனுக்கு. வருதல்) கூத்தாட்டு - கூத்தாடுகின்ற, அவை - களத்திற்கு குழாத்தற்று - பார்ப்போர் கூட்டம் வருவது போன்ற தாகும், போக்கும். செல்வம் அவனைவிட்டுப் போவதும், அது - அந்த மக்கள் கூட்டமானது, விளிந்தற்று - கூத்து முடிந்தவுடன் போவதை போன்றதாகும்.

(க-ரை ஒருவனுக்குப் பெரிய செல்வம் வருதல் கூத்தாட்டத்தினைப் பார்க்க வந்த கூட்டம் போன்ற தாகும். அச்செல்வம் அவனை விட்டுப் போவது, கூத்து முடிந்தவுடன் அக்கூட்டம் போவது போன்றதாகும்.