பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

மக்களிடையே பிறப்பினால் உயர்வு தாழ்வு வகுத்துக் கொண்டு வாழ்கின்ற பழக்கத்தினை ஆசிரியர் வள்ளுவனாரி பெரிய குற்றமாகக் கருதிப் பேசுகின்றார். எல்லா மக்கள் உயிர்க்கும் பிறப்பின் இயல்பு சமத்துவமாகவே கருதப்பட வேண்டியதாகும். அவரவர்கள் செய்கின்ற நற்செயல்கள் அல்லது தீச்செயல்கள் என்பவைகளைக் காரணமாக வைத்துத்தான் சிறப்பினைக் கூறுதல் வேண்டும்.

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (972)

மக்களிடையே பெருமை சிறுமை என்பதாகப் பேச வேண்டுமென்றால் அவரவர்கள் செய்கின்ற தொழில் களை மனதிற் கொண்டுதான், பேசுதல் வேண்டும். வேறு எக்காரணத்தை வைத்துக்கொண்டும் பெருமை சிறுமை களைப் பேசுதல் குற்றமாகும்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். (505)

உயர்ந்த எண்ணங்களை மக்களிடையே பரப்பிச் சமுதாயத்தை வளர்க்க வேண்டும். மனத் துய்மையும் நல்ல எண்ணங்களும் நிறைந்தவர்கள் இல்லாத சமுதாயம் உலக வழக்கில் சொல்வது போல் எவ்வளவுதான் அறிவு பெற்றவர்களைப் பெற்றிருந்தாலும் முன்னேற்றமடைவது என்று கருதுவது இயலாத காரியமாகும். மற்றவர்களுக்கு இயன்ற அளவு தக்க நேரத்தில் ஒருவன் உதவி செய்ய வில்லையென்றால் அவனுக்கு அறிவு இருந்துதான் பயன் என்ன என்று ஆசிரியர் வினவுகின்றார்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்கோய்போல் போற்றாக் கடை. (315)

அறிவுக்குத் தனிச்சிறப்பளித்து விளக்கம் தருகின்ற ஆசிரியர் வள்ளுவனார் நல்ல செயல்களைச் செய்து