பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

8. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

(ப-ரை) தீரத்துறந்தார் - முழுதுந்துறந்த முனிவர்கள். தலைப்பட்டார் - பேரின்ப வீட்டினையடைந்தவர்கள் ஆவர், மற்றையவர் . அப்படித் துறவாதவர்கள், மயங்கி வலைப்பட்டார் - அஞ்ஞானத்தில் மயங்கிப் பிறப்பென்னும் வலையில் அகப்பட்டவராவர்.

(கரை) முற்றத் துறந்தவர்கள் பேரின்பம் என்னும் வீட்டினை அடைந்தவராவர். அப்படித் துறவாதவர்கள் அஞ்ஞானத்தால் பிறப்பாகிய வலையிலே அகப்பட்ட வராவர்.

9. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

கிலையாமை காணப் படும்.

(ப-ரை பற்று - ஆசைகள், அற்ற கண்ணே - நீங்கிய பொழுதே (அத்தன்மை), பிறப்பு . பிறவியை அறுக்கும் மீண்டும் பிறவாதபடி ஒழிக்கும், மற்று ஆசைகள் அறாத போது, நிலையாமை - பிறப்பு இறப்பு என்னும் நிலையாமையானது, காணப்படும் - கண்டு கொள்ளப் படும்.

|க-ரைi பற்றுகளையெல்லாம் விட்ட அப்பொழுதே அப்பற்றற்ற நிலை பிறப்பினை அறுக்கும். அவை அறாத போது (அறுக்கப்படாத போது) அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.

10. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு. (ப-ரை பற்று அற்றான் - பற்றில்லாத இறைவனின், பற்றினை - பற்றினை, பற்றுக - மனத்தில் பற்றிக் கொள்க, அப்பற்றை - அப்பற்றினை. பற்றுக-மனத்திலே கொள்ளுதல் வேண்டும். (ஏனெனில்) பற்றுவிடற்குதொடர்ந்து வந்த பற்று விட்டுப் போவதற்காம். .