பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

(க-ரை எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் உணர்த்திய வீட்டு நெறியை மனத்துள் கொள்க. அதனை மனத்துட் கொண்டு ஞான முறைகளைச் செய்க: விடாது வந்த பற்று விட்டுப் போவதற்காக என்பதாம்.

36. மெய்யுணர்தல்

(பிறப்பு வீடு என்பவைகளின் காரணங்களை ஐயமின்றி உண்மையாக உணர்தல்)

1. பொருள் அல்ல வற்றைப் பொருள் என்று உணரும்

மருளான்.ஆம் மாணாப் பிறப்பு. (ப-ரை) மாணாப்பிறப்பு - (இன்பம் இல்லாத துன்பம் நிறைந்த பிறப்பு, பொருள் மெய்ப் பொருள், அல்லவற்றை அல்லாதவற்றை, பொருள் - மெய்ப் பொருள், என்று - என்பதாக, உணரும் உணருகின்ற, கருளான் - அஞ்ஞானத்தினாலே, ஆம் உளதாகும்.

(கரை) மெய்ப் பொருள் அல்லாதவற்றை மெய்ப் பொருள் என்று உணரும் விபரீத உணர்வினால் துன்பம் திறைந்த பிறப்பு உண்டாவதாகும். -

2. இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்கீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. (ப-ரை) மருள் - அஞ்ஞானமான விபரீத அறிவிலிருந்து, நீங்கி - நீங்கியவராகி, மாசு - குற்றம், அறு - இல்லாத, காட்சியவர்க்கு - மெய்ஞ்ஞானம் பெற்றவர்களுக்கு, இருள். மயக்கமான பிறப்பு, நீங்கி - நீங்கப் பெற்று, இன்பம் பயக்கும் . பேரின் பத்தினை அளிக்கும்,

(கரை) அஞ்ஞானமான மயக்கத்திலிருந்து நீங்கிய மெய்யுணர்வுடையார்களுக்கு அம்மெய்யுணர்வு பிறப்பினை நீக்கிப் பேரின்ப விட்டினைக் கொடுக்கும். s