பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 7 0

(க-ரை) செல்வத்தை ஆக்குவதற்கு நல்லவையெல் லாம் தீயன வாய் அழிக்கும். அதுவேயன்றித் தீயவையெல் லாம் நல்லனவாய் ஆக்கும்; இவை ஊழினால் நடப்பு தாகும்.

6. பரி யினும் ஆகாவாம் பால்ைல உய்த்துச்

செனரியினும் போகா தம. 367

{ப-ரை பால் ஊழ்வகையால், அல்ல - தம்முடன் இருக்கமுடியாத பொருள்கள், பரியினும் - காப்பாற்றி வைக்கப்பட்டிருந்தாலும், ஆகாவாம் - நில்லாமற் போய் விடும், தம் தம்மிடம் இருந்தே ஆக வேண்டிய பொருள் கள், உய்த்து தாமே வெளியில் கொண்டுபோய், சொரியினும் போகா - எறிந்தாலும் போகாவாம்.

(கரை) ஊழினால் தம்மிடம் இருக்கக் கூடாத பொருள்கள், வருந்திக் காப்பாற்றினாலும் தம்மிடத்து நில்லாமல் போகும். ஊழினால் தம்மிடம் இருக்க வேண்டிய பொருள்கள் புறத்தே கொண்டு போய்த் தள்ளினாலும் தம்மை விட்டுப் போகாவாம்.

7. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377

(ப-ரை) கோடி - செல்வத்தினைக் கோடி அளவில், தொகுத்தாரிக்கும் முயன்று சேர்த்தவர்களுக்கும், வகுத்தான் - ஊழால் வகுத்தவன், வகுத்த வகுத்து வைக்கப்பட்ட, வகை . வகையின்படி, அல்லாமல் - அல்லா மல், துய்த்தல் - நுகர்தல், அரிது - முடியாததாகும்.

(கரை) ஐம்பொறியினால் நுகரப்படும் பொருள்கள்

கோடி அளவில் சேர்த்து வைத்திருந்தாலும் இயற்கையாகிய

ஊழ் வகுத்த வகையால் அல்லது நுகர்தல் (அனுபவித்தல்) முடியாததாகும்.