பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

(க-ரை விளக்கம் நிறைந்த நூல்களைக் கற்றவருடன் நோக்கக் கல்லாதவர்கள் . மிருகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க மக்களாய்ப் பிறந்தவர்கள் எவ்வளவு நல்லவர் களோ - அவ்வளவு தீமையுடையவர்களாவார்கள்.

42. கேள்வி

(கற்றறிந்தவர் சொல்வதைக் கேட்டல்)

1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. 41 Í

(ப-ரை) செல்வத்துள் - செல்வங்களுள் எல்லாம், செல்வம் - சிறப்பான செல்வமானது, செவிச் செல்வம் - செவியால் வரும் செல்வமாகும், அச்செல்வம் - அச் செல்வ விமானது, செல்வத்துள் . பிற செல்வங்கள், எல்லாம் - எல்லாவற்றிலும், தலை - தலைமையானதாகும்.

(க-ரை ஒருவர்க்குச் சிறப்புடைய செல்வமானது செவியால் வரும் செல்வமாகும். அச்செல்வம் பிற செல்வங் கள் எல்லாவற்றையும்விடத் தலையாய செல்வமாகும்.

2. செவிக்கு உணவு இல்லாதபோழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும். 412

(ப-ரை) செவிக்கு - காதுக்கு, உணவு - உணவாகிக கேள்வி, இல்லாத - இல்லாத போழ்து - நேரத்தில், வயிற்றுக்கும் - வயிற்றுக்கும், சிறிது ஈயப்படும் . சிறிதளவு உணவு இடப்படும்.

(கரை) காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது கயிற்றுக்கும் சிறிதளவு உணவு இடப்படும்.