பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

3. செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின்

ஆன்றாரோடு ஒப்பர் கிலத்து. 413;

(ப-ரை) செவி - செவிக்கு, உணவின் உணவாகிய, கேள்வி உடையார் . கேள்வியினை உடையவர்கள்

நிலத்து பூமியில் இருந்தாலும், அவி - வேள்வித்தியில் இடப்படும், உணவின் - (அவியாகிய) உணவினையுடைய, ஆன்றாரோடு - தேவர்களோடு, ஒப்பர் . ஒப்பாவாtகள்,

(கரை) செவி உணவாகிய கேள்வியினையுடை யவர்கள், பூமியில் வாழ்பவர்களாக இருந்தாலும் அவி. உணவினையுடைய தேவர்களோடு ஒப்பாவார்கள்.

4. கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை. 414 {ப-ரை) கற்றிலன் - ஒருவன் கல்லாதவனே, ஆயினும். ஆனாலும், கேட்க, கற்றார் சொல்லக் கேட்டல் வேண்டும், அஃது - அக்கேள்வியறிவானது, ஒருவற்கு - ஒருவனுக்கு, ஒற்கத்தின் - மனத்தளர்ச்சி வந்தபோது, ஊற்றாம் பற்றுக் கோடான, துணை . துணையாகும்.

(க-ரை) நூல்களை ஒருவன் கற்காவிட்டாலும், கற்றறிந்தார் சொல்லக் கேட்க வேண்டும். அவ்வாறு: கேட்டது, ஒருவனுக்குத் தளர்ச்சி வந்த காலத்தில் பற்றுக் கோடாகத் துணை செய்யும்.

5. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல், 415 .

(ப-ரை) ஒழுக்கம் . ஒழுக்கம், உடையார் - உடை யவர்களின், வாய்ச்சொல் - வாயில் பிறக்கின்ற சொற்கள், இழுக்கல் - வழுக்குதல், உடையுழி . உண்டான போது, 1சேற்று நிலத்தில் ஊற்றுக் கோல் . ஊற்றுக்கோல், அற்றே

போன்று உதவும்.