பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

(க.ரை வழுக்குதலையுடைய சேற்று நிலத்தில் நடந்துல் போகின்றவர்களுக்கு ஊன்றுகோல் போல, துன்பம் வந்த காலத்தில் ஒழுக்கமுடையவர்களுடைய வாயிலிருந்து" வரும் சொற்கள் துணையாக நின்று உதவும்.

6. எனைத்தானும் கல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும். 416.

(ப-ரை) எனைத்தானும் - எவ்வளவு சிறிதேயானா லும், நல்லவை கேட்க - நல்ல உறுதிப்பொருள்களைக் கேட்டறிதல் வேண்டும், (அவ்வாறு கேட்டறிவது) அனைத் தானும் - அந்த அளவினாலும், ஆன்ற - நிறைந்த பெருமை - பெருமையினை, தரும் . தருவதாகும்.

|க. ரை) ஒருவன் சிறிதளவாகவேனும் நற்பொருள் களைக் கேட்டாலும், அக்கேள்வியானது அந்த அளவுக் காவது நிறைந்த பெருமைகளைத் தரும் என்பதாகும். 7. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்

[இழைத்துணர்ந்து 4.17

ஈண்டிய கேள்வி அவர்.

(ப-ரை) இழைத்துணர்ந்து - நுண்ணியதாக ஆராய்ந் தறிந்து, ஈண்டிய . நிறைந்த, கேள்வியவர் - கேள்வியினை யுடையவர்கள், பிழைத்து - தவறாக, உணர்ந்தும் - உணர்ந்த போதும், பேதைமை அறியாமையினைப் பயக்கும் சொற்களை, சொல்லார் . சொல்லமாட்டார்கள்.

(க-ரை) நுட்பமாக ஆராய்ந்து அறிந்து நிறைந்த கேள்வியுடையவர்கள் தவறாக பேதைமை யினை உண்டாக்கும் சொற்களைச் சொல்லமாட்டார்கள்.

8. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி. 418. (ப-ரை) கேள்வியால் - உறுதிப் பொருள்களைக். கேட்டு, தோட்கப்படாத - துளைக்கப்படாத, செவி .